நோக்கம்
"பின்னை நின்று என்னே பிறவி பெறுவது?
முன்னை நன்றாக முயல் தவம் செய்கிலர்;
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே".
- (திருமந்திரம் 81)
உலகின் மிகவும் தொன்மையான மூத்தமொழியாக கருதப்படுவது வல்லினம் மெல்லினம் இடையினம் என மூன்றிலிருந்தும் ஒவ்வொரு எழுத்து எடுத்து 'தமிழ்' என பெயர் சூட்டப்பட்ட நம் உயர்தனிச் செம்மொழியின் பெருமைகளை பறைசாற்றுவதற்காக ஸ்ரீவெங்கடேஸ்வரா கல்லூரியில் உருவாக்கப்பட்டதே தென்றல் தமிழ்மன்றம். கடவுளுக்கு பலகோயில்கள் உண்டு. அந்த கடவுளை ஆராதிக்க உதவும் தமிழுக்கு ஒருகோவிலாக நிறுவப்பட்டது எங்கள் தென்றல் தமிழ்மன்றம்.
உலகளவில் புகழ்பெற்ற தத்துவங்கள் பலவற்றை தமிழ் அறிஞர்கள் மொழிபெயர்ப்பு செய்துள்ளனர். மேலும் தமிழ் மொழியில் பலவாழ்வியல் மேலாண்மைத் தத்துவங்கள் பொதிந்துகிடக்கின்றன. பலவற்றை மாணவர்களிடையே கொண்டுசேர்த்து விவாதிப்பதன்மூலம், தக்க அறிவையும் வளர்த்தெடுக்கமுடியும். தத்துவ விசாரணையின் வழி வாழ்வைப்பற்றிய விசாலபார்வையும், மேம்பட்டபுரிதலும் கிடைக்கப்பெற வழிவகுப்போம்.